Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: தொடர் தோல்வியிலிருந்து மீளுமா இந்தியா …..?ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

7-வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் இந்திய அணி தனது முதல்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து  நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது .எனவே இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியதால் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்கவேண்டிய பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது .அதே சமயம் இந்திய அணியின் பேட்டிங்கில் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டர் என இரண்டிலும் பொலிவிழந்து காணப்படுகிறது. அதேசமயம் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ,ரிஷப் பண்ட் ஆகியோரும் சொதப்பி வருகின்றன .அதேசமயம் பவுலிங்கில் அணியில் பும்ராவை தவிர மற்ற வீரர்கள் விக்கெட்டை கைப்பற்ற சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஆப்கானிஸ்தான் அணி சிறந்த பார்மில் உள்ளது. இதில் பேட்டிங்கில் ஷஷாய்- ஷாஷாத் ஜோடிஅதிரடி தொடக்கத்தை கொடுக்கின்றனர் . அதேபோல் பந்துவீச்சில் முஜிபுர் ரகுமான், முகமது நபி , ரஷித் கான் ஆகியோர் மிரட்டி வருகின்றன. இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது .இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Categories

Tech |