Categories
புதுச்சேரி

தண்டவாளத்தில் தலை வைத்த மாணவர்…. பிறந்த நாளில் நடந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்டவாளத்தில் தலைவைத்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மணி 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிறந்த நாள் அன்று தமிழ்மணி விளையாட போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் தமிழ்மணி மைதானத்திற்கு செல்லாமல் ரயில்வே மேம்பாலத்திற்கு சென்றுள்ளார்.

அதன்பிறகு தமிழ்மணி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளார். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற ரயில் தமிழ்மணியின் மீது ஏறி இறங்கியதால் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |