Categories
தேசிய செய்திகள்

ரஃபேல் போர் விமானங்களின் சிறப்பம்சங்கள் ….!!

இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கஇருக்கின்றது.

ரஃபேல் விமானத்தில் சிறப்பம்சங்கள் : 

ரபேல் போர் விமானங்கள் 15.3 மீட்டர் நீளமும் , 10.9 மீட்டர் அகலமும் , 5.3 மீட்டர் உயரமும் கொண்டவை.

இந்த ரபேல் போர் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 2130 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டவை.

சராசரியாக மணிக்கு 1,912 கிலோமீட்டர் வேகம் வரை இந்த விமானங்களை செலுத்த முடியும்.

இந்த விமானங்களில் எதிரி நாட்டின் ரேடார் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வடிவமைப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.

ரபேல் போர் விமானங்கள் இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் அனைத்துக் காலநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டவை.
ரபேல் போர் விமானங்களில் 3D வரைபடத்தை பெறும் வசதி இருப்பதால் இலக்குகளை சரியாக குறி வைத்து தாக்குதல் நடத்த முடியும்.

மூன்று மாடல்களில் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களில் இரண்டு வகைகளை விமானப்படையின் தளங்களில் இருந்தும்,  மற்றொன்று விமானம் தாங்கி கப்பல்களுக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.

இவை ஏர் சுப்பீரியாரிட்டி வகை போர் விமானம் வகையைச் சார்ந்தவை எனவே சுமார் 37 .04 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.

இது இந்தியாவிடம் இருக்கும் சுகாய் 30 போர் விமானங்களை விட குறைந்த எடை கொண்டவை.
ஒரு ரபேல் விமானம் 2 சுகோய் போர் விமானங்களுக்கு சமமாக இருக்கும்.

இதில் ஒரு முறை முழு எரிபொருளை நிரப்பினால் சுமார் 3,700 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.

இந்த ரபேல் போர் விமானங்களில் இருக்கும் நவீன ரேடார் கருவிகள் மூலமாக எதிரிகளின் வான்பகுதியை துல்லியமாக கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் .

இதில் பைலட்டுக்கு தேவையான ஆக்ஸிஜன் பூர்த்தி செய்வதற்கான  உற்பத்தி செய்யும் வசதி இருக்கிறது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் பைலட்டின் கவனம் சிதறாமல் , உடல் பாதிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

 ரபேல் போர் விமானங்கள் மூலம்  நம் நாட்டின் வான் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும்.

Categories

Tech |