செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, சுதந்திரம் பெற்ற பிறகு மாநில வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு மாநிலத்தின் உரிமையை இன்னொரு மாநிலத்தினுடைய அமைச்சர் எடுக்கிறார் என்றால், விந்தையிலும் விந்தையாக இருக்கிறது திமுக ஆட்சியிலே… கேரள அமைச்சர் வந்து தமிழகத்திற்கு பாத்தியப்பட்ட பெரியார் அணையை வந்து திறக்கிறார் என்றால், இங்கே எவ்வளவு சட்ட ஒழுங்கு எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது.
இந்த அரசு பார்த்தும் பாராமல் இருக்கிறது. நீர்வளத்துறை அமைச்சர் ஏதோ சப்பை கட்டு கட்டுகிறார். நான் கேட்கிறேன் இதே துரைமுருகன் போய் கேரளா மாநிலத்தில் திறக்க முடியுமா? விஜயசாகர் அணையை திறக்க முடியுமா ? எங்க ஆட்சியில் இருக்கட்டும், எங்களை என்ன சொல்வார்கள், இந்த அரசு கையாலாகாதா அரசு என்று கூறியிருப்பார்கள். இன்றைக்கு முதலமைச்சர் அதை பற்றி பேசவே இல்லை, இதற்கு நல்ல தீர்வு காணவேண்டும்.
உண்மையிலேயே 138அடி தான் ஏறியுள்ளது. எங்கள் ஆட்சி காலத்தில் மூன்று முறை 142 அடியாக உயர்த்தி இருக்கிறோம். மூன்று முறை 142 அடியாக உயர்ந்து இருக்கிறது. அப்போது எல்லாம் அந்த கேரள அரசு ஒன்றும் செய்யவில்லை. இப்போது வந்து திறக்கிறார்கள். இன்னொரு மாநிலத்தினுடைய அமைச்சர் திறக்கிறது சரியா, நம்முடைய அணையில் வந்து மதகு திறப்பது சரியா ? சொல்லுங்க என செல்லூர் ராஜீ கேள்வி எழுப்பினார்.