முதல் முறையாக நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து இயக்குனர் வம்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யின் 66-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி தளபதி 66 படத்தை தோழா, மகரிஷி போன்ற ஹிட் படங்களை இயக்கிய வம்சி இயக்க இருக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார்.
Director @directorvamshi about his 1st meeting with Thalapathy @actorvijay 😉#Beast #Master #Thalapathy66
— Vijay Fans Trends 🐐 (@VijayFansTrends) November 2, 2021
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வம்சி விஜயை முதல் முறையாக சந்தித்தது குறித்து பேசியுள்ளார். அதில் ‘விஜய்யை எப்படியாவது சந்தித்து கதை சொன்னால் போதும் என்றுதான் சென்றேன். ஆனால் அவர் ஓகே சொல்லுவார் என எதிர்பார்க்கவில்லை. பெரிய நடிகராக இருந்தாலும் அதை சற்றும் காட்டிக் கொள்ளாமல் மிக எளிமையாக இருந்தார். இது பெரும்பாலும் தமிழ் படத்தை போல தான் இருக்கும். அரசியல் படம் இல்லை. தோழா, மகரிஷி போல எமோஷனல் படமாக இது இருக்கும். கதாநாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை. டிசம்பர் மாதத்தில் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும்’ என கூறியுள்ளார்.