ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தீர்ப்பு_க்கெதிரான சீராய்வு மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.
ரபேல் ஒப்பந்தம் :
இந்தியாவின் விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 போர் விமானங்களை வாங்க முடிவெடுத்து ஒப்பந்தம் செய்தது.இதில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களை விட குறைந்த ஒப்பந்தபுள்ளி கூறிய பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது என 2012இல் முடிவெடுக்கப்பட்டது. அதில் பறக்கத் தயாராக இருக்கும் 18 விமானங்களை வாங்குவது , மீதமுள்ள 108 விமானங்களை அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் தயாரிப்பது என்பது தான் அந்த ஒப்பந்தம்.
ஆட்சி மாற்றம் :
இந்த ஒப்பந்தத்தை அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இறுதி செய்வதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக தலைமையிலான அரசு அமைந்தது.இந்த நிலையில் 2015 இல் பிரான்ஸ் சென்ற மோடி பறக்கத் தயாராக இருக்கும் 36 விமானங்களை உடனே வாங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார்.அதற்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு போடப்பட்டது. அப்போது பாதுகாப்பு கேபினட் கமிட்டி அனுமதி இன்றி மோடி எப்படி ஒப்பந்தத்தை இறுதி செய்தார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் கேபினட் கமிட்டி அளித்த ஒப்புதல் அடிப்படையில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பாஜக பதிலளித்தது.
இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவது என ஒப்பந்தம் செய்த நிலையில் , பாஜக அரசு கூடுதல் விலைக்கு வாங்க ஒப்பந்தம் போட்டது ஏன் ? என்பதே காங்கிரஸ் எழுப்பும் கேள்வி. எனவே விமானத்தின் விலை குறித்த விவரங்களை வெளியிட அக்கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் போர் விமான ஒப்பந்தம் குறித்த விவரங்களை பகிர கூடாது என இரு நாடுகள் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதால் விலை உள்ளிட்ட தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது.
மேலும் ஏன் அரசின் ஹிந்துஸ்தான் நிறுவனம் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை , இந்தத் துறையில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பது காங்கிரசின் கேள்விகள். அதற்க்கு 2012 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனம் என கூறப்பட்டு இருப்பதாகவும் , காங்கிரஸ்தான் இந்திய பொதுத்துறை நிறுவனத்தை மதிக்கவில்லை என்று பாஜக பதிலளித்தது.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணை வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்த பாஜக அரசு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முழுமையான தகவல்களை அளித்து இருப்பதால் எதிர்க்கட்சிகள் அதன் மூலமாகவே விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவே நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டியது இல்லை என்கிறது.
ரபேல் ஊழல் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பான CBC_யிடம் தேசிய காங்கிரஸ் புகார் அளித்தது இருக்கிறது. இதனிடையே டிசம்பர் 14ஆம் தேதி 2018 என்று உச்சநீதிமன்றம் ரபேல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இதனை மறு பரிசீலனை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதற்கிடையே நடந்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் பிரதமர் மோடி மீது ரபேல் விமர்சனம் முன்வைத்து பிரசாரம் செய்யப்பட்டதை முறியடித்து பாஜக அரசு தனமான வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை சீராய்வு மனு மீதான விசாரணையின் தீர்ப்பு வெளியாகின்றது. இதனால் தேசியளவில் நாளைய தினம் கவனம் பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ரபேல் விவகாரம் எடுபடாமல் போனதை போன்று நாளைய உத்தரவு எடுபடுமா ? எடுபடாதா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.