பரவலாக மழை பெய்து வருவதால் தோண்டிமலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடிமெட்டில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள பூப்பாறை வரை 11 கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகள் முன்பு தொடங்கிய இந்த பணிகள் தற்போது 90% வரை முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தேனியில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் போடிமெட்டுவில் இருந்து பூப்பாறை செல்லும் சாலையில் உள்ள தோண்டிமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் மண் சரிவு மற்றும் மலைமேல் உள்ள பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.