முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கத்தோடு கேரள நடிகர்கள் அவதூறு தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதை கண்டித்தும், அதனை எதிர்க்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஜெயபிரகாஷ், போடி தொகுதி செயலாளர் பிரேம்சந்த், கம்பம் தொகுதி செயலாளர் குணசேகரன், பேரிடர் மீட்பு பாசறை மாவட்ட செயலாளர் விக்னேஷ் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் முல்லைப் பெரியாறு அணை குறித்த து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.