Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சொல்றதுக்கு எதுவும் இல்ல” …. தோல்விக்கு காரணம் இதுதான்- சச்சின் டெண்டுல்கர் கருத்து ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் நியூசிலாந்து ,பாகிஸ்தான் அணிகளுடன் மோதி படுதோல்வியடைந்தது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .இந்த நிலையில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டியின்போது கூறுகையில்,” இந்திய அணிக்கு இது கடினமாக நாளாக அமைந்துள்ளது.

அணியின் செயல்பாடு குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை. அதேசமயம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்களின் வியூகத்தை களத்தில் சிறப்பாக செயல்படுத்தி இருந்தார் அதோடு நமக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது எதிரணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் காரணமாக நம்மால் ஒன்று ,இரண்டு  ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. இதனால் நம்முடைய வீரர்கள் பெரிய ஷாட் அடிக்க முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்,” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |