தளபதி 66படத்தை பற்றி இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தை பற்றி இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் ”இந்த படம் அரசியல் சார்ந்த படம் கிடையாது. இந்த படம் ஒரு எமோஷனல் கதையுள்ள படம்” எனவும், இந்த படத்தின் அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் முதல் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.