தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி முடியும் வரை சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய தின்பண்ட கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொருள்கள் வாங்கும் வரும் பொதுமக்கள் கொரோனா தொற்றை வாங்கி செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
Categories
தீபாவளி முடியும் வரை….. சற்றுமுன் அமைச்சர் அதிரடி….!!!!
