Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு…. இந்தியா அளிக்கும் சான்றிதழ்…. வெளியான குட் நியூஸ்…!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான அடையாளமாக இந்த சான்றிதழை வைத்திருந்தால் தான் வெளிநாடுக்ளுக்கு பயணம் செய்ய முடியும். இவ்வாறு இந்தியா அளிக்கும் சான்றிதழை ஒரு சில நாடுகள் அங்கீகரித்துள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு இந்தியா அளிக்கும் சான்றிதழை மேலும் 5 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, எஸ்தோனியா, கிர்கிஸ்தான், மங்கோலியா, மொரீசியஸ், பாலஸ்தீனம் ஆகியவை இந்திய தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளன.

Categories

Tech |