Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலை விபத்தில் முதியவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இம்மாவட்டத்தின் கால்நடை மருத்துவக் கல்லூரியில் துறை தலைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காரில் உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் மேட்டத்தூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி நடந்து சென்ற முதியவர் மீது இடித்து விட்டு சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |