ஓசூரில் தமிழ்நாடு நாளை ஒட்டி தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பின் கொடியை ஏற்ற முயன்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு நாளாக கடந்த அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் தற்போதைய ஆளும் திமுக அரசு தமிழ்நாடு நாள் ஜூலை 18ஆம் நாள் என மாற்றம் செய்துள்ளது. இதற்கு தமிழ் தேசிய பேரியக்கம் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓசூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் எல்லை போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளைப் போற்றும் வகையிலும், தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையிலும், ராம் நகரில் அந்த இயக்கத்தின் கொடியை ஏற்ற முயன்றனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 12 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.