Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்த விலங்கு…. அலறி சத்தம் போட்ட கன்றுக்குட்டி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஊருக்குள் புகுந்து சிறுத்தை கன்றுக்குட்டியை தாக்கிய சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிமாதையனுர் பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களில்  வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில்  ஆனந்தன் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 10 மாத கன்று குட்டியை தாக்கியதோடு அதனை தூக்கி சென்றுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து  சென்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களின் சத்தம் கேட்டு சிறுத்தை கன்றுக்குட்டியை கீழே போட்டு விட்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த கன்றுக்குட்டியை பார்வையிட்டு அங்கு தீவிர கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்கலுக்கு முன்பு சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து கொன்றது. தற்போது ஊருக்குள் நுழைந்து சிறுத்தை கன்றுக்குட்டியை தாக்கியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு  வைத்து பிடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |