Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது மட்டும் நடந்துட்டா …..! இந்திய அணி அரையிறுதிக்கு போக முடியும் ….!!!

இந்திய அணி அடுத்த 3 போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளை அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் .

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதிக்காண வாய்ப்பு வெகுவாக மங்கிவிட்டது . இந்நிலையில் இந்திய அணி அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு முழுமையாக முடிந்து விட்டது என சொல்ல முடியாது .அதேசமயம் ‘குரூப் 2’ பிரிவில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

இதனிடையே இந்திய அணி அடுத்த 3 போட்டிகளில் ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை அதிக வித்தியாசத்தில் வீழ்த்தி வேண்டும் .அதேபோல் ஆப்கானிஸ்தான் , நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை கைப்பற்ற வேண்டும் இவ்வாறு முடிவுகள் சாதகமாக அமையும் பட்சத்தில் இந்தியா ,நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருக்கும். அப்போது  ரன்ரேட்டில் முன்னிலையில் இருக்கும் அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். இவ்வாறு அமைந்தால்  மட்டுமே அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற வாய்ப்புள்ளது.

Categories

Tech |