Categories
தேசிய செய்திகள்

ஏத்துக்கோங்கப்பா…! பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. அமைச்சர் சொன்ன கருத்தால் சர்ச்சை…!!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் ரூ.100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  அதுமட்டுமின்றி கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனவால் மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா செய்தியாளர்களை சந்தித்தபோது, தனிப்பட்ட நபரின் ஊதிய உயர்வை நாம் ஏற்றுக் கொள்வது போல பெட்ரோல் டீசல் விலை உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்கு அனைத்தையும் அரசு இலவசமாக கொடுக்க முடியாது. இதில் எதிர் கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். அமைச்சரின்  இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |