Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆச்சரிய பட வைக்கும் ”தூதுவளை” இவளோ மருத்துவ பயனா ?

தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது குழம்பாக கடைந்து சாப்பிட்டால் நெஞ்சில் கட்டிருக்கும் கபம் நீக்கி உடல் பலமடையும்.

இதன் இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் குணமடையும்.

இந்த இலையில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல் வலி நுரையீரல் கோளாறுகள் குணமடையும்.

தூதுவளைக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பித்த நோயும் குணமாகும்.

தூதுவளை இலையை அரைத்து தண்ணீருடன் சேர்த்து அருந்தி வந்தால் இருமல் இரைப்பு நோய் இறங்காமல் இருக்கும்.

தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை கஷாயம் செய்து குடிப்பது நல்லது.

Categories

Tech |