Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானவன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் தனது குட்டியுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் கூலி தொழிலாளியான கிறிஸ்டோபர் என்பவரது வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து நாசப்படுத்தியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பின்வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பி விட்டனர். அதன் பிறகு காட்டு யானைகள் தனியார் தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இவ்வாறு காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |