Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் திறந்தாச்சு” மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற முதல்வர்….!!

சென்னை மடுவின்கரை பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் 17 மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் கல்லூரிகளிலும், நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இதையடுத்து 19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், சென்னை மடுவின்கரை பள்ளியில் ஆய்வு செய்த முதல்வர் முக. ஸ்டாலின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றுள்ளார். அதன்பின்னர், மாணவர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்ததை பற்றி கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களையும் வழங்கினார்.

Categories

Tech |