பாரிஸ் காலநிலை மாநாட்டு ஒப்பந்தத்தின்படி நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள் அனைவரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டனர்.
உலகப் பொருளாதாரத்தில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ள 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் ஜி-20 கூட்டணியின் 16வது உச்சி மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது. இந்த 2 நாள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக ரோம் நகரம் சென்றுள்ளார். அங்கு, வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப்பை சந்தித்து கலந்துரையாடினர். இதனையடுத்து பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சியினை குறித்த அமர்வு மாநாட்டின் கடைசி நாள் நேற்று நடைபெற்றது.
கடந்த 2015ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாநாட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தப்படி, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் வருகின்ற 2030க்குள் புவி வெப்பமயமாதலை பாதியாக குறைக்க அதாவது 1.5 டிகிரி செல்சியஸிற்கு கொண்டுவர ஒப்புக்கொண்டனர். மேலும் கார்பன் உமிழ்வை 2050ஆம் ஆண்டுக்குள் பூஜிய நிலைக்கு கொண்டு வரவும் உறுதி எடுத்துள்ளனர். நிலக்கரி பயன்பாடு தான் கார்பன் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஆகவே நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் மின் உற்பத்திக்காக உபயோகபடுத்தப்படும் முக்கிய எரிபொருளான நிலக்கரி பயன்பாட்டினை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எனவே நிலக்கரி தொடர்பான செயல் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் அறிவுறித்தினர். இதனை தொடர்ந்து மாநாடானது முடிவடைந்தது. இதேபோல் நேற்று இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரிலும் பருவநிலை மாநாடு ஆரம்பமானது. இதில் உலக வெப்பமயமாதலை எதிர்த்து இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் நுட்பங்களை குறித்து பிரதமர் மோடி பங்கேற்று பேசவிருக்கிறார்.
இதன் பின் அவர் நாளை நாடு திரும்ப உள்ளார். இந்நிலையில்G – 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்ற சிறிய விமானமானது பாகிஸ்தான் ஆகாயம் வழியாக சென்றது. இதற்கான அனுமதியை இந்திய விமான போக்குவரத்து ஆணையம் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து பெற்றது. மீண்டும் அவர் பாகிஸ்தான் வழியாகவே நாடு திரும்புவார்.