உலகத்தலைவர்கள் ட்ரெவி நீருற்றுக்கு அருகில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இத்தாலி தலைநகரான ரோமில் 16வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் போன்ற பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் போன்ற உலக நாடுகளின் தலைவர்கள் ரோம் நகரில் உள்ள ட்ரெவி நீரூற்றுக்கு அருகில் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
The moment when PM Shri @narendramodi Ji & #G20 leaders throw a coin in the Trevi fountain, Rome. #PMModiInItaly pic.twitter.com/iDEjRlZbON
— Dr. Rutvij Patel (@DrRutvij) October 31, 2021
மேலும் அங்குள்ள பாரம்பரிய வழக்கப்படி, தங்கள் தோள்களுக்கு பின்புறத்திலிருந்து நாணயம் ஒன்றை நீருக்குள் சுண்டிவிட்டுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் நாங்கள் மீண்டும் ரோம் நகருக்கு வருகை புரிவோம் என்று கூறப்படுகிறது. இது அங்கு பராம்பரிய வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.