நாடு முழுவதும் கடந்த வருடம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 36 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 2020 ஆம் வருடத்தில் 11,396 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2019 வருடத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 613 மேலும் 2018 ஆம் வருடத்தை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 413. இதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் தற்கொலையானது குடும்பப் பிரச்சினை, காதல் விவகாரம், உடலில் பிரச்சனைகள் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு சிலர் சித்தாந்தம், சினிமா பிரபலம் ஆராதனை, போதைப்பழக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப பிரச்சினை காரணமாக 4006 பேரும், காதல் விவகாரம் காரணமாக 1337 பேரும், உடல்நிலை பிரச்சினை காரணமாக 1327 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே இருப்பதால் கூடுதல் மன உளைச்சல் ஏற்படுவதால் தற்கொலை செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.