உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார் .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 பேர் வெற்றி பெற்றனர் .
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் கடந்த 25-ஆம் தேதி நேரில் சந்தித்து, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்குமாறு அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.