Categories
உலக செய்திகள்

“இந்த தொற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!”.. -உலக சுகாதார மையத்தின் இயக்குனர்..!!

உலக சுகாதார மையத்தின் இயக்குனரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ் தற்போதிருக்கும் தொற்று பாதிப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார மையத்தின் இயக்குனரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ், ஜி20 நாடுகளுக்கான சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற போது உரையாற்றியிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, மனிதர்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியாத வகையில் ஒரு வைரஸ் உருவாகும் என்பது உயிரியலுக்கான உறுதி.

எனவே, தற்போது பரவும் தொற்று பாதிப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இதற்கு அதிகாரம், நிதி மற்றும் வகைப்படுத்தப்பட்ட உலக சுகாதார மையம் அவசியம் என்று கூறியிருக்கிறார். இது தான், இந்தத் தொற்றுக்கு எதிரான தாக்குதல் மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்கான புதிதான வழிமுறை என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |