Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் ? முதல்வர் பாய்ச்சல் …!!

நடிகர் கமலஹாசனுக்கு என்ன ? தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் , சிவாஜி கணேசன் அவர்களே தேர்தலை சந்தித்து வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. அவரை விட மிகச் சிறந்த நடிகர் இல்லை அதே நிலைமைதான் கமலஹாசனுக்கு ஏற்படும். கமலஹாசன் வயது முதிர்ந்த காரணத்தினாலே அவர் அரசியல் என்று முன் ஏற்பாடு செய்து கொண்டார்.அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் படத்தை பார்த்தால் கூட போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்.

Image result for kamal hassan edappadi palanisamy

எனவே தான் அவர் கட்சி ஆரம்பித்து உள்ளார். அவருக்கு அரசியலில் என்ன தெரியும் ?  எத்தனை ஊராட்சி மன்றம் இருக்குன்னு தெரியுமா ? எத்தனை நகராட்சி இருக்குன்னு தெரியுமா ? எத்தனை மாநகராட்சி இருக்குனு தெரியுமா ? அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தெரியும்  அடிப்படை பிரச்சனைன்னு தெரியுமா ? படத்துல நடிச்ச மக்களுடைய பணத்தை வாங்கிக் கொண்டார்கள் அந்த பணத்தில் வாயிலாக இன்று அரசியலில் தொடங்கியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |