பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார் .
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது.இதனிடையே இன்று இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்துடன் மோத உள்ளது .இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது .இதுகுறித்து கேப்டன் விராட் கோலி கூறும்போது”தற்போது ஹர்திக் பாண்டியா நல்ல நிலையில் உள்ளார் .இதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது .
அதோடு ஹர்திக் பாண்டியா நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பந்து வீசுவார் .மேலும் அணிக்கு 6-வது பவுலர் மிக முக்கியமானது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2-வது பந்து வீசியதால் 6-வது பந்துவீச்சாளர் தேவைப்படவில்லை. அதுமட்டுமில்லாது பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கி இருந்தால் 6-வது பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருப்போம். இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் தேவைப்படும்போது முதன்மை பந்து வீச்சாளர் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதோடு அணியில் ஷர்துல்தாகூர் எங்கள் திட்டத்தில் இருக்கிறார்.
அவர் தொடர்ந்து சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார் என்றார்.மேலும் பேசிய அவர், “பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது ஒட்டு மொத்த பந்துவீச்சு எடுபடவில்லை . இதனால் குறிப்பிட்ட நபரை மட்டும் குறை சொல்ல முடியாது அதோடு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியில் போல்ட் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார் . அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த திட்டத்தை வைத்துள்ளோம்” இவ்வாறு கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.