டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணி வீரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது .குறிப்பாக இந்திய அணி பவுலர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இந்தத் தோல்விக்கு இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது .இதனிடையே இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோத உள்ளது. இதனால் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய வேண்டும் என கிரிக்கெட்நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக அணியில் மாற்றம் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளனர் .
இதனிடையே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இடம் பெற்ற வீரர்களே இன்றைய போட்டியிலும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது .குறிப்பாக அணியில் ஹர்திக் பாண்டியா தற்போது பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் இன்றைய ஆட்டத்தில் பவுலிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி ப்ளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல்: