விஷ்ணு விஷாலின் ‘எஃப். ஐ.ஆர்’ திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எஃப். ஐ.ஆர்’. மனோ ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். மேலும், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்தப்படம் கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், இந்த படம்OTT யில் வெளியாகும் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, இது தவறான செய்தி. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், இந்த படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்.