Categories
தேசிய செய்திகள்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்….!!!

புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகினர் பவர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து அவரது மகள் வருவதற்காக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது.

இதையடுத்து அவர் பெங்களூர் வந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். பின்னர் அவரது மகள் வந்ததைத் தொடர்ந்து இன்று முதலமைச்சர் முன்னிலையில் புனித ராஜ்குமாருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |