தமிழகத்தில் அரசு துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு c, Dபிரிவுத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியாளர்களை தொடர்ந்து பொருளாம் காலத்தில் மருத்துவத் துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது தேயிலை தோட்ட கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா காரணமாக தோட்டக்கலை ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்,தேயிலை தோட்ட கழகத்தின் 212 ஊழியர்களுக்கான ஊதியம் இந்த வருடம் மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம், படிகள் மற்றும் தொடர்புடைய சலுகைகள் திருத்தம் குறித்து தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விதிகள், 2017 இல் வெளியிடப்பட்ட அரசின் ஆணைகளை அமல்படுத்த அரசு இயக்குநருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.