டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் குவித்தார். இதன்பிறகு 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது .இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ராய் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர் ஆஸ்திரேலியா பவுலர்களை திணறடித்தார்.இதில் 20 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரி அடித்து விளாசி வேகமாக அரைசதம் கடந்தார் .இதில் மறுமுனையில் டேவிட் மலன் 8 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக 11.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது .இதில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 71 ரன்னுடனும் , பேர்ஸ்டோ 16 ரன்னுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.