Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்”… காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் நேரிடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

புதிய முயற்சிகளில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். சக மாணவரிடம் பொறுமையாக நடந்துகொள்வது அவசியம். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியம். கூடுமானவரை ஆசிரியரின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இன்று இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் கூட நல்ல பலனை கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மஹா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். மஹா அன்னாபிஷேகம் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவில் இருக்கும். வற்றாத செல்வத்தை ஏற்படுத்தி கொடுக்கும். தயவுசெய்து மஹா  அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |