Categories
உலக செய்திகள்

‘அடுத்த தலைவர் இவர் தான்’…. 28 நாடுகள் பரிந்துரை…. அறிக்கை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

உலக சுகாதார அமைப்பினுடைய தலைவராக மீண்டும் Tedros Adhanom Ghebreyesus தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் அடுத்த தலைவராக தற்போது இருக்கும் Tedros Adhanom Ghebreyesusசே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “சுகாதார அமைப்பின் தலைவராக தற்பொழுது இருக்கும் Tedros Adhanom Ghebreyesusன் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது. மேலும் இந்த பதவிக்கு மீண்டும் அவரே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளானது கடந்த மாதம் 23ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக பல நாடுகளிலிருந்து பரிந்துரை கடிதங்கள் வந்துள்ளன. அதனை கடந்த 1 ஆம் தேதி திறந்த பார்த்த பொழுது Tedros அவர்களின் பெயரைத் தவிர வேறு எவரின் பெயரும் பரிந்துரை செய்யவில்லை. குறிப்பாக அவரின் பெயரை பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற 28 நாடுகள் பரிந்துரை செய்துள்ளன. அவர் ஐ.நா.வின் மிகவும் பலம் வாய்ந்த உலக சுகாதார அமைப்பின் தலைவராக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்றார்.

மேலும் எத்தியோப்பியாவின் சுகாதாரத் துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதிலும் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருந்த முதல் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்னும் பெருமையும்  Tedros பெறுகிறார்.  இருப்பினும் இவர் மீண்டும் பொறுப்பேற்பதற்கு அவரின் சொந்த நாடான எத்தியோபியா ஆதரவை அளிக்கவில்லை. ஏனெனில் அங்குள்ள டிக்ரேவில் மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் நடந்து வருகிறது.

இது குறித்து அவர் கண்டனம் தெரிவித்ததால் அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பொதுவாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களை பரிந்துரை செய்யும் பொழுது அவர்களின் சொந்த நாடுகள் முதலில் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால் எத்தியோப்பியாவின் ஆதரவில்லாமல் Tedros மீண்டும் பொறுப்பை ஏற்பதில் இன்னலை ஏற்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |