Categories
உலக செய்திகள்

ஐ.நா.வுக்குள் அவங்கள அனுமதிக்க முடியாது..! தலிபான் அரசை விமர்சித்த ரஷ்ய தூதர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வாஸிலி நெபென்ஜியா தற்போது ஐ.நா. சபையில் தலிபான் அரசை அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வாஸிலி நெபெஜின்யா தற்போது ஐ.நா. சபையில் தலிபான் அரசை அனுமதிக்க தயாராக இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தலிபான்கள் மீதான அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் உடனடியாக அவை குறித்து ஆலோசிக்க அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதேபோல் ரஷ்ய தூதர் தீவிரவாத ஒழிப்பு, சிறுமிகள் மற்றும் பெண்கள் உரிமைகள், போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றில் தடைகளை நீக்குவது என்பது தலிபான்கள் மீதான நம்பிக்கையை பொறுத்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார். இருப்பினும் தற்போது தலையாய வேலை ஆப்கானிஸ்தான் பொருளாதார நிலைமையை சீர் செய்வதே என்று கூறியுள்ளார்.

Categories

Tech |