தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய்களை தூர்வார வேண்டும். பருவமழை காலத்தில் அவசர உதவிக்கு 1070 மற்றும் 1077 என்ற இலவச உதவி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
இதையடுத்து வடகிழக்கு பருவமழை ஒட்டி அவசர எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவசரப்பட்டு பாட்டு வரை இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும். எனவே 1913, 044- 25619206, 044- 25619207, 044-25619208 என்ற எண்களிலும், 94454 77205என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மழை வெள்ளம் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.