Categories
தேசிய செய்திகள்

கோவாவில் பைக் டாக்சியில் பயணித்த ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ…!!!

கோவாவில் பைக் டாக்ஸியில் ராகுல்காந்தி பயணித்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆட்சியைப் பிடிப்பதற்காக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கோவாவில் தேர்தல் பணிகள் தொடங்கிய பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பகுதியிலிருந்து பாம்போலிம் பகுதியில் இருந்து பனாஜியில் உள்ள உள்ள ஆசாத் மைதானத்தில் பைக் டாக்சியில் பயணம் மேற்கொண்டார். இவர் ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |