கார் டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். காலனியான சமத்துவபுரம் பகுதியில் ரமேஷ் வசித்து வந்தார். இவர் கார் டிரைவராக இருந்தார். கடந்த 16-ம் தேதி வெளியில் சென்ற ரமேஷ் பின் வீடு விரும்பவில்லை. இந்நிலையில் கர்நாடக மாநிலம் நெலமங்கலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒன்சங்கரா ஏரியில் ரமேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இவரை கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்து கொலை செய்ததோடு, உடலில் கல்லை கட்டி ஏரியில் வீசி உள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ரமேசின் நண்பர்களான சேடப்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சேகர், ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தினேஷ், சங்கர், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.