டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்பாக இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனிடையே நடந்த 3 போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது .இதனிடையே நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.
ஏனெனில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணி அடுத்து நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ,நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது .அதேசமயம் நாளைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது எளிதாகும் .இதனிடையே கடந்த 2019-ல் நடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியில் போட்டியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது . இதனால் நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டி உள்ளது.
அதே சமயம் இந்திய அணி பேட்டிங்கில் ரோகித் சர்மா ,கேப்டன் விராட்கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ,சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர்.அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி ,ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இதுவரை டி20 உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் 4 போட்டிகளில் நியூசிலாந்து அணியே வென்றுள்ளது. இதுவரை இரு அணிகளும் 16 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 6 முறையும், நியூசிலாந்து அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன . 2 போட்டி டையில் முடிந்துள்ளது .எனவே நாளை நடைபெறும் போட்டியில் இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாக கருதப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.