தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தீவிரமாக பரவி வந்தது. அப்போது நோயாளிகள் மருத்துவமனையில் நிரம்பி வழிந்தன. கொரோனா பரிசோதனை செய்ய அவற்றோடு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள ஆள் பற்றாக்குறை நிலவியது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையை சமாளிக்க அரசு மருத்துவத்துறைக்கு தற்காலிக ஊழியர்களை நியமித்து. மருத்துவர்களுக்கு உதவவும், கொரோனா நோயாளிகளை கவனிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் போன்றோர் தற்காலிக பணிகளுக்காக ஒப்பந்த ஊதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.
கொரோனா தடுப்பு பணியில் இவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. தற்போது அவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்ட 1,50,168மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 196 கோடியே 91 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.