Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்….! 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி….!!!

டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது .

டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 76 ரன்னுக்குள்  6 விக்கெட் இழந்து திணறியது .இதன் பிறகு கேப்டன்  முகமது நபி- குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இறுதியாக 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது .இதில்முகமது நபி, குல்பதின் நயிப்  இருவரும் தலா 35 ரன்னுடன்  இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் .

இதன்பிறகு 148 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி விளையாடியது .இதில் தொடக்க வீரரான ரிஸ்வான் 8 ரன்னில் வெளியேற ,அடுத்து வந்த பகர் சமான் 30 ரன்னும் ,முகமது ஹபீஸ் 10 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் இழக்க மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த கேப்டன் பாபர் அசாம் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார்.இதன்பிறகு களமிறங்கிய ஆசிப் அலி இறுதியில் அதிரடியாக விளையாடி ஒரே ஓவரில் 4 சிக்சர் அடித்து விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக பாகிஸ்தான் அணி 19வது ஓவரில் 148 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதன் மூலம் பாகிஸ்தான் அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Categories

Tech |