விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் எனவும், ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
மேலும் இலவச பட்டா வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் 100 – க்கும் மேற்பட்ட பெண்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.