தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கனவாய் மலைப்பகுதியில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதி அமைந்துள்ளது. அந்த மலைப்பகுதியில் தர்ம சாஸ்தா கோவிலின் அருகே S வடிவிலான வளைவு ஒன்று உள்ளது. நேற்று காலையில் தேனியில் இருந்து திருநெல்வேலி நோக்கி ஒரு அரசு பேருந்தும் மதுரையில் இருந்து தேனி நோக்கி அரசு பேருந்தும் அந்த S வளைவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் முன் பக்கங்கள் அப்பளம் போல நொறுங்கி உள்ளது. இதில் 25 பேர் படுகாயம் அடைந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் எந்த ஓர் எச்சரிக்கை பலகை மற்றும் வாகனங்களை பிரதிபலிக்கும் குவி ஆடிகளை பொருத்தாததே விபத்துக்கான காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.