நம்பிராஜனிடம் வடிவேலு அடி வாங்கியதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ஒரு காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து அசத்தி வந்த வடிவேலு, பின் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் வடிவேலு மீது பல்வேறு விதமான சர்ச்சை பேச்சுகள் எழுந்தன. சரியான நேரத்திற்கு வடிவேலு படப்பிடிப்பு தளத்திற்கு வருவதில்லை என்றும், தேவையில்லாத குடைச்சல்கள் கொடுத்ததால் இவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் தயங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான நம்பிராஜன் வடிவேலுவை கன்னத்தில் அறைந்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நம்பிராஜனுக்கும், வடிவேலுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏவிஎம் ஸ்டுடியோவில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கோபத்தில் நம்பிராஜன் வடிவேலுவின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதைப் பார்த்த ஒரே ஒரு ஆள் பயில்வான் ரங்கநாதன் மட்டும் தானாம். இது தனக்கு மட்டும்தான் தெரியும் என்றும் வேறு யாருக்கும் தெரியாது என்றும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரச்சனைகளால் தான் வடிவேலுவால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார். தற்போது வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.