Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல முன்னணி நடிகர் மாரடைப்பால் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு (46) இன்று 11: 30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. புனித் ராஜ்குமாரின் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து விக்ரம் மருத்துவமனை நிர்வாகம் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது, சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம், இப்போது எதுவும் கூற முடியாது, ஐசியுவில் சிகிச்சை தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்த நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மருத்துவமனையில் புனித் ராஜ்குமார் காலமானார்..

இதற்கிடையே இந்த செய்தியறிந்து ரசிகர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.. தற்போது இந்த செய்தி கேட்டு மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் புனித் ராஜ்குமார் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலமாக பிரார்த்தனை செய்து வந்தனர்.. ஆனால் அவர் மரணமடைந்தது தென்னிந்திய திரையுலகையே உலுக்கியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்..

Categories

Tech |