புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2, 3 ம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகிற 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரியில் நவம்பர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
Categories
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு… புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!!
