Categories
உலக செய்திகள்

“பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டது!”.. என்ன பெயர்..? தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட தகவல்..!!

முகநூலின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.

முகநூல் இணையதள நிறுவனமானது, மெய்நிகர் இணையதள உலகமாக இருக்கும் “மெட்டாவெர்ஸ்” பக்கம் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறது. எனவே, பேஸ்புக் என்ற பெயரை மாற்றுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தினுடைய கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் கூறியிருப்பதாவது, சமூக வலைதளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

புதிதாக ‘மெட்டா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பல சமூக பிரச்சினைகளுடன் போராடியதில் அதிகமாகவே கற்றிருக்கிறோம். அவற்றையெல்லாம் புதிய அத்தியாயமாக உருவாக்க வேண்டிய தருணம் இது. எனினும் தங்கள் ஆப் மற்றும் பிராண்டுகள் மாற்றப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |