லைசன்ஸ் தொடர்பான பரிவர்த்தனைகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ளும் வகையில் மென்பொருளை மேம்படுத்தும் பணியில் போக்குவரத்து துறை தற்போது ஈடுபட்டுள்ளது. வாகனம் ஓட்டுவதற்கு பழகுபவர்கள், எல்எல்ஆர் எனப்படும் பழகுநர் உரிமம் பெறுவது, ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பது,ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை மாற்றுவது உள்ளிட்டவற்றுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரியான ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
அதனால் ஆர்டிஓ அலுவலகங்களின் இயல்பான பணிகள் பாதிக்கப்படும். இதை தவிர்க்க கூடிய வகையில் பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் ஆகிய பரிவர்த்தனைகளுக்கு பயனாளிகள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் வகையில் சாரதி மென்பொருளில் மாற்றம் செய்யும் பணியில் போக்குவரத்து துறை ஈடுபட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.