Categories
பல்சுவை

வங்கி ATM PIN நம்பரை மொபைல் மூலம் ஈஸியா மாற்றலாம்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வங்கிகளை அணுக வேண்டும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாம் வங்கிக்கு நேரடியாக சென்று அல்லது ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். நம்முடைய ஏடிஎம் அட்டைக்கு தனிப்பட்ட பாஸ்வேர்டு ஒன்று இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக நமது ஏடிஎம் அட்டை இன் பாஸ்வேர்டை மாற்ற விரும்பினால் அல்லது மறந்து விட்டால் வண்டிக்கு நேரடியாகச் சென்று மாற்ற வேண்டியதாக இருக்கும். தற்போது ஏடிஎம் பாஸ்வேர்டை வீட்டில் இருந்தபடியே மொபைல் போன் மூலமாக எளிதாக மாற்றும் முறை தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

நீங்கள் ஏடிஎம் பின்னை மறந்துவிட்டால், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் மூலம் புதிய ஏடிஎம் பின் பெறலாம். உதாரணமாக உங்களிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து முதலில் Pin என்று டைப் செய்து space விட்டு உங்கள் ஏடிஎம் அட்டை எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை பதிவிட்டு மறுபடியும் space விட்டு உங்க வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களையும் டைப் செய்து கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இதற்குப் பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அருகிலுள்ள எந்த ஏடிஎம் இயந்திரத்திற்கு சென்று உங்கள் ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து OTP-ஐ உள்ளிடவும். இதற்குப் பிறகு உங்கள் புதிய ஏடிஎம் பின்னை உருவாக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் ஏடிஎம் பின் பெறும் வசதியை பெரும்பாலான வங்கிகள் வழங்கியுள்ளன. உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுமையான தகவல்களைப் பெறலாம்..

Categories

Tech |