Categories
உலக செய்திகள்

இத பெண்களாலும் செய்ய முடியும்..! மலை முகுடுகளில் சாகசம்… மகளிர் குழு சாதனை..!!

மகளிர் குழு ஒன்று Freeride mountain biking என்றழைக்கப்படும் மலை முகுடு பகுதிகளில் நேர்த்தியாக சைக்கிள் ஓட்டும் கலையினை அசால்ட்டாக செய்து காட்டியுள்ளது.

Freeride mountain biking என்றழைக்கப்படும் மலை முகுடு பகுதிகளில் நேர்த்தியாக சைக்கிள் ஓட்டும் கலையானது ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட நிலையில் தற்போது மகளிர் குழு ஒன்று அவற்றை முறியடித்து காட்டியுள்ளது. அதாவது கரடு முரடான மற்றும் மேடு பள்ளம் உள்ள மலைப்பாதையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 8 பெண்கள் கொண்ட ரெட்புல் அணியினர் சாதாரணமாக கடந்து சென்றுள்ளனர்.

மேலும் அமெரிக்காவை சேர்ந்த Rebecca Rusch எனும் பெண்மணி Extreme sporting என்ற ஆபத்தான விளையாட்டுகளில் கலந்து கொண்டு பிரபலமடைந்த நிலையில் தற்போது பெண்களுக்கு freeride mountain biking-ல் இருந்த வெற்றிடத்தையும் நிரப்பும் நோக்கில் இந்த ரெட் புல் ஃபார்மேஷன் போட்டியை மகளிருக்காக உருவாக்கியுள்ளார்.

Categories

Tech |